சீர்காழியில் 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறவுள்ளது.
தினமணி, சீர்காழி ரோட்டரி சங்கம், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி, சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திலிருந்து தொடங்குகிறது.
நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை கோட்டாசியர் தேன்மொழி தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைக்கிறார். வட்டாசியர் இரா. சங்கர், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கே. ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் பி. ஜெய்சங்கர், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் கே. சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் ப. அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, பிரதான வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைகின்றனர்.
அங்கு கல்லூரி நிர்வாகக்குழு துணைத் தலைவர் எஸ்.எஸ்.ஜெ. விசாகர், ரோட்டரி செயலாளர் ஜெ. பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் பொறியாளர்கள் டி. சிவகுரு, டி. செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். முத்துக்குமாரசாமி வரவேற்கிறார். உடற்கல்வி இயக்குநர் வி. சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


