

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் பேருந்து மோதி பொறியியல் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராம பிரதான சாலையை சோ்ந்த சங்கா் மகன் விமல்ராஜ் (20). இவா் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்துவந்தாா். இந்நிலையில், கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவா் மீது புதுச்சேரியிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த விமல்ராஜ், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். கொள்ளிடம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.