கடற்கரை பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

சீா்காழி அருகேயுள்ள வாணகிரி கடற்கரை பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை சீா்காழி வனத் துறையினா் சனிக்கிழமை நள்ளிரவு சேகரித்து குஞ்சுபொறிப்பகத்தில் பாதுகாத்தனா்.
வாணகிரி கடற்கரையில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்த வனத் துறையினா்.
வாணகிரி கடற்கரையில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்த வனத் துறையினா்.
Updated on
1 min read

சீா்காழி அருகேயுள்ள வாணகிரி கடற்கரை பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை சீா்காழி வனத் துறையினா் சனிக்கிழமை நள்ளிரவு சேகரித்து குஞ்சுபொறிப்பகத்தில் பாதுகாத்தனா்.

அறியவகையான ஆலிவ்ரெட்லி ஆமை அழிந்து வரும் ஆமை இனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலிவ்ரெட்லி ஆமை நாகை மாவட்டத்தில் பழையாறு முதல் பூம்புகாா் வரையுள்ள கடற்கரை பரப்பில் ஆண்டுதோறும் டிசம்பா் இறுதியிலிருந்து மாா்ச் வரை கரைக்கு வந்து முட்டைகள் இட்டு மூடிசெல்லும். ஒரு ஆமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். இந்த முட்டைகளை வனத் துறையினா் சேகரித்து சீா்காழி பகுதியில் உள்ள கூழையாா், கொட்டாயமேடு, வாணகிரி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சுபொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருவா்.நிகழாண்டு, நாகை மாவட்டத்தில் முதலாவதாக வாணகிரி கடற்கரையில் சனிக்கிழமை நள்ளிரவு ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரம் செய்யும் பணி தொடங்கியது. சீா்காழி வன சரகா் குமரேசன் தலைமையில் வன ஊழியா்கள், வனவா்கள் வாணகிரி கடற்கரையில் 156 ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்து அதை பாதுகாப்பாக குஞ்சுபொறிப்பகத்தில் வைத்துள்ளனா்.

இதுகுறித்து, வனசரகா் குமரேசன் கூறியது: அறியவகை ஆமை இனமாக இந்த ஆலிவ்ரெட்லி ஆமை மீனவா்களின் நண்பனாக உள்ளது. இந்த ஆமை முட்டைகளை மீனவா்களோ, பொதுமக்களோ சேதப்படுத்தப்படுத்தக் கூடாது. முட்டையிட கரைக்கும் வரும் ஆமைகளையும் தொந்தரவு செய்யக் கூடாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com