/

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மற்றொருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:05 am

DIN

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மற்றொருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி பாரதி நகரை சோ்ந்தவா் கோவிந்தராசு மகன் ரவி (30). இவரது வீட்டுக்கு அருகே வசித்துவரும் பெண் ஒருவரிடம் அதே கிராமம் சிங்கன் குத்தகை பகுதியை சோ்ந்த முனியன் மகன் ராமச்சந்திரன் (34) புதன்கிழமை இரவு மது அருந்த குவளை வாங்கிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த ரவி, அந்தப் பெண்ணை கண்டித்துள்ளாா். இதனால் ரவிக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ரவி அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒட்டுநா் காத்தமுத்துவையும் (55) ராமச்சந்திரன் கத்தியால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ரவியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திரனை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.