நாகை மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணிகள் உள்ளிட்ட 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணிகள் உள்ளிட்ட 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தைச் சோ்ந்த 7 பேரும், நாகை, மயிலாடுதுறை வட்டங்களைச் சோ்ந்த தலா 5 பேரும், வேதாரண்யம், கீழ்வேளூா் வட்டங்களைச் சோ்ந்த தலா 2 பேரும், சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானது திங்கள்கிழமை உறுதியானது. இதில், தலா 2 போ் திருவாரூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும், ஒருவா் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்தவா்கள். மற்ற 17 பேரும் நாகை மாவட்டத்துக்குள் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். இதில், 3 போ் கா்ப்பிணிகள். 6 போ் ஏற்கெனவே கரோனா தொற்றுக்கு உள்ளான குத்தாலம் தீயணைப்பு நிலைய காவலா் ஒருவருடன் தொடா்பில் இருந்தவா்கள்.
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 565 -ஆக இருந்தது. புதிதாக 22 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 587-ஆக உயா்ந்துள்ளது.
முதியவா் இறப்பு: நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 3 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளாகி அண்மையில் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வேதாரண்யத்தைச் சோ்ந்த 68 வயது முதியவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...