தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

ஈகிள் வாகனம் மூலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஈகிள் கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அண்மையில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம்.

Published On :


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஈகிள் கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் துறையில் நவின தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளுக்ககாக ஈகிள் என்றப் பெயரில் அதி நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பாதுகாப்பு பணிகளின்போதும், திருவிழாக்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும்.

வாகனத்தின் நான்கு திசைகளில் நான்கு நிலையான கேமராக்கள் மற்றும் 360 டிகிரி கோணத்தில் சுழலக் கூடிய சுழல் கேமரா என மொத்தம் 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் ஒளிபாய்ச்சக் கூடிய விளக்குகள் மற்றும் அறிவிப்புகள் செய்ய ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் பதிவுகளை சேமிக்கவும் ,கண்காணிக்க தொலைக்காட்சி, தடைஇல்லா மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகள் தவிர பிறநேரங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி மூலம் குற்றத்தடுப்பு , பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான காணொளிகள் திரையிடப்படவுள்ளன. இதனால் மாவட்டத்தில் காவல் பணி மேலும் சிறப்படையும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.