மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் தூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

News image
நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.
Updated On :11 அக்டோபர் 2020, 12:18 pm

DIN

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் தூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினத்துக்கும் தென்கிழக்கில் சுமார் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நர்சாபூரிலிருந்து 520 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் மாறி, மேற்கு - வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திர கடற்கரையையொட்டிய நர்சாபூர் - விசாகப்பட்டினம் இடையே அக். 12-ஆம் தேதி இரவு கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு தொலைதூர 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கொடி ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.