மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேதாரண்யத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஆளில்லாத வீட்டின் கதவு பூட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.

News image
கொள்ளையடிக்கப்பட்ட வீடு
Updated On :22 அக்டோபர் 2020, 1:21 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஆளில்லாத வீட்டின் கதவு பூட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள தோப்புத்துறை சிவன்வடக்கு வீதி பகுதியில் வசிப்பவர் அப்துல் கனி. இவருக்கு கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதன்காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அருகாமையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இதனிடையே, அப்துல் கனியின் மகன் சாகுல் கமீது அவ்வப்போது வீட்டிற்கு சென்று கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் சென்று பார்த்த போது வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் திருடு போனது  தெரிய வந்தது.

Story image

இதையடுத்து, நாகையில் இருந்து வந்த கைரேகை தடயவியல் நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் துலிப் உதவியுடன் காவல்துறையினர் துப்பறிந்தனர்.

இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.