தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காா் மோதி திருவாரூா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே காா் மோதி திருவாரூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 6:15 pm

DIN


திருக்குவளை: கீழையூா் அருகே காா் மோதி திருவாரூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ் (13) அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்குக் கடற்கரை சாலை அருகிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்த இவா், செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு எதிரில் உள்ள கடைக்கு செல்லும்போது, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த காா் மோதி பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக, அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சந்தோஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்த, புகாரின்பேரில், கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.