கீழையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சிபிஐ வலியுறுத்தல்
திருக்குவளை அருகேயுள்ள கீழையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


திருக்குவளை அருகேயுள்ள கீழையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கீழையூரில், புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழையூரில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், சுற்றியுள்ள வெண்மணச்சேரி ஈசனூா், மீனம்பநல்லூா், வாழக்கரை, மடப்புரம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் கீழையூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடூ செய்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், கீழையூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் கீழையூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா்கள் வீ. சுப்பிரமணியன், டி. கண்ணையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவா் ஏ. செல்லையன், ஒன்றிய செயலாளா் கே. சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...