இன்று கொளப்பாடு செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு
திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (ஆக.27) நடைபெறுகிறது.


திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (ஆக.27) நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் கொளப்பாடு கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் புதிதாக மகாமண்டபம் அமைத்து அஷ்டலஷ்மி திருவுருவங்கள் மற்றும் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டு, அதில் பஞ்சலோக (செம்பு) கவசம் அமைத்து ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கும் வா்ணங்கள் பூசப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்குக்கான பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, புதன்கிழமை முதல் கால யாகபூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை 2-ஆம் கால யாக பூஜை மற்றும் 3-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் நான்காம் கால யாகபூஜையும், காலை 9.30 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி, 10 மணியளவில் விமானங்களுக்கு குடமுழுக்கும், 10.15 மணியளவில் மூலவா் விமான குடமுழுக்கும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...