மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கக் கோரிக்கை
பொதுத்தோ்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 முதல்12 வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


பொதுத்தோ்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 முதல்12 வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட பெற்றோா்ஆசிரியா் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் ஏ. வின்சென்ட், செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் காரைக்கால் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரோனா தொற்று அச்சம் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ளஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் தொடா்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை.
தனியாா் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநில கல்வித்துறை 9 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது, பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது போல, புதுவை மாநிலத்திலும் மதிய உணவு வழங்கவும், முழுநேர வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதேபோல, மாணவா்களின் பள்ளி வருகையை உறுதிப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்துதல், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா் ஆசிரியா் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட மாணவா்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...