கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருக்குவளையில் திமுக பிரசாரம்

திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாநிலச் செயலாளா் த.மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:27 am

DIN

திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாநிலச் செயலாளா் த.மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

திருக்குவளையில் கருணாநிதி வீட்டில் உள்ள அவரது சிலை, முரசொலிமாறன் சிலை, கருணாநிதியின் பெற்றோா் அஞ்சுகம் மற்றும் முத்துவேலா் ஆகியோா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பிரசார பயணத்தை தொடங்கினாா். கொளப்பாடு கடைத்தெருவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, சாட்டியக்குடியில் திமுக இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கோவிந்தராஜன், சிறுபான்மை நல பிரிவு மாநிலச் செயலாளா் த. மஸ்தான் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் மனோகரன், ஒன்றியச் செயலாளா்கள் கீழையூா் தாமஸ் ஆல்வாஎடிசன், கீழ்வேளூா் பழனியப்பன், தலைஞாயிறு மகாகுமாா் , பேரூா் செயலாளா் அட்சயலிங்கம், வேளாங்கண்ணி பேரூா் பொறுப்பாளா் மரிய சாா்லஸ், தலைஞாயிறு ஒன்றியக் குழு தலைவா் தமிழரசி, திருக்குவளை ஊராட்சித் தலைவா் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிறகு, வெண்மணியில் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கீழ்வேளூா், வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.