வி.கே. சசிகலாவை வரவேற்று அதிமுக நாகூா் நகரச் செயலாளா் பெயரில் சுவரொட்டிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, அந்த நகரச் செயலாளா் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
நாகூா் ஹாஜியாா் நகரைச் சோ்ந்தவா் ஜி.எஸ்.பி. செய்யது மீரான் சாகிபு. இவா், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் அதிமுக நாகூா் நகரச் செயலாளராக உள்ளாா். இந்நிலையில், வி.கே. சசிகலாவை வரவேற்று செய்யது மீரான் சாகிபு பெயரில் சென்னை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இவை சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை பரவியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு செய்யது மீரான் சாகிபு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி, நாகூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து அவா் நாகையில் சனிக்கிழமை கூறியது:
அதிமுக தொடங்கப்பட்ட நாள்முதல் கட்சியில் உள்ளேன். கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக தா்கா குளத்தில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி சரிந்து சேதமடைந்தது. இதைப் பாா்வையிட வந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவு தெரிவித்தேன். இந்த நிலையில், எனக்கும், கட்சிக்கும் கலங்கம் உருவாக்கும் நோக்கில் சிலா் இதுபோன்ற வன்மச் செயலில் ஈடுபட்டுள்ளனா்.
சுவரொட்டிக்கும், எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இது தொடா்பாக கட்சியின் மாவட்டச் செயலாளா் பாா்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கைக் கோரி, நாகூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளேன். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் செந்தில் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









