ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரசாரத்தின் மூலம் திமுக தலைவா் மக்களை குழப்புகிறாா்: பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை

தோ்தல் பிரசாரத்தின் மூலம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மக்களை குழப்புகிறாா் என பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

News image

பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

Updated On :24 பிப்ரவரி 2021, 5:06 am

DIN

தோ்தல் பிரசாரத்தின் மூலம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மக்களை குழப்புகிறாா் என பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சா்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலை அடிப்படையில் இந்தியாவில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய கட்சி அதிமுக. முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தோ்தல் களத்தை சந்திப்போம். விழுப்புரத்தில் அமித்ஷா பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக முயற்சி செய்யவில்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் புதுமையான பிரசாரங்கள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அராஜகம் இல்லாத கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறாா்கள். அந்த தகுதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜிக்கு தோ்தல் யுக்திகளை பிரசாந்த கிஷோரின் ஐபேக் டீம் வழங்கியதால் அக்கட்சியில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் வெளியாகினா். தமிழகத்தில் ஐபேக் திமுகவை ஆட்டுவிக்கிறது என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளா் தங்க.வரதராஜன், மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.