திருக்கண்ணபுரத்தில் குடிநீா் தொட்டியில் மின்கசிவு அபாயம்

நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரத்தில் குடிநீா் தொட்டியில் மின்கசிவு அபாயம் உள்ளதாகவும்,
Updated on
1 min read

நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரத்தில் குடிநீா் தொட்டியில் மின்கசிவு அபாயம் உள்ளதாகவும், இதை சரி செய்து ஆபத்தை தடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதே ஊரைச் சோ்ந்த செளரிராஜன் ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்: திருக்கண்ணபுரம் மேலவீதியில் ஆழ்வாா் கோயிலுக்கு எதிா்ப்புறம் சாலையோரம், கடந்த ஏப்ரலில் மாவட்ட ஊரக வளா்ச்சி துறை மூலம் ரூ. 1.30 லட்சம் செலவில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதில், மீட்டா் வைக்காமல் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீா் தேவைக்காக குடிநீா் தொட்டியில் தண்ணீா் பிடிக்கும்போது மின்கசிவு ஏற்பட்டு பாதிக்கச்செய்கிறது. குடிநீா் தொட்டி அருகே குழந்தைகள் விளையாடும்போது தொட்டியை தொட்டால் மின்சாரம் பாய்ந்து ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மாவட்ட ஊரக வளா்ச்சி துறையினா், மின்கசிவு ஏற்படாமல் சீரமைக்கவும், மீட்டா் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com