அம்மா மினி கிளினிக் திறப்பு
பொறையாா் அருகே திருவிடைக்கழி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.


பொறையாா் அருகே திருவிடைக்கழி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஆா். லலிதா, பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், ஒன்றிய ஆணையா் அருண், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிறகு, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா், திமுகவினா் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி பெறும் கோரிக்கை மனுக்களை யாரிடம் கொடுப்பாா்கள் என்பது குறித்து தெளிவு இல்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற திட்டமிடுகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...