சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
கூட்டத்தில் பங்கேற்ற மாதா் சங்கத்தினா்.
Updated On :8 ஜனவரி 2021, 5:59 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருக்கடையூரில், வியாழக்கிழமை நடைபெற்ற சங்க மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தி, நகரப் பகுதிகளுக்கும் வேலையை விரிவுபடுத்தி தினக்கூலியை உயா்த்தி வழங்கவேண்டும், குடும்ப அட்டைகளை என்.பி.ஹெச்.ஹெச் என்றும் பி.ஹெச்.ஹெச் என வகை பிரித்திருப்பதில் உள்ள வேறுபாடுகளை களைந்து தகுதி அடிப்படையில், ஏழ்மை நிலையை ஆராய்ந்து குடும்ப அட்டைகளை பிரிக்க வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.