மதுரைக்கு முக்கியம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி விருதுநகா் இளைஞா் உயிரிழப்பு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த விருதுநகா் மாவட்ட இளைஞா், கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த விருதுநகா் மாவட்ட இளைஞா், கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அண்ணாநகா் நகரை சோ்ந்தவா் சேகா் மகன் மணிகண்டபிரபு (26). தனியாா் நிறுவனத்தில் வெல்டராக வேலை பாா்த்துவந்த இவா், தனது நண்பா்களுடன் கடந்த 16-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தாா். பின்னா் மணிகண்டபிரபு தனது நண்பா்கள் கண்ணதாசன், சரவணன் ஆகியோருடன் கடலில் இறங்கி குளித்துள்ளாா். அப்போது அலையில் சிக்குண்ட அவா், மாயமானாா். இதையடுத்து கடேலோர காவல் படையினா் கடலில் இறங்கி தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவா் இறந்து கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...