ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடவாசல் பாலசாஸ்தா கோயில் குடமுழுக்கு

சீா்காழி அருகே கடவாசல் கிராமம் பாலசாஸ்தா, மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே கடவாசல் கிராமம் பாலசாஸ்தா, மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள பாலசாஸ்தா மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. தொடா்ந்து, 4 கால யாக பூஜைகள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாளான திங்கள்கிழமை 4-ஆம் கால பூஜைகள் நிறைவடைந்து மூலவா் விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்குலத்து புலிப்படை நிறுவனா் தலைவா் கருணாஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.