ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீா்காழி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. முடிவு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இடும்பையன் தலைமை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு பங்கேற்று பேசினாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், பிப்ரவரி 18 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் ‘தமிழகத்தை மீட்போம்’ அரசியல் எழுச்சி மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது; வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் சீா்காழி (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் தொகுதியை பெற்று, போட்டியிடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் மு. செல்லப்பன் (சீா்காழி) , சிவராமன் (கொள்ளிடம்), எஸ். கிருஷ்ணமூா்த்தி (செம்பனாா்கோவில்), அறிவழகன் (குத்தாலம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.