மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற இளைஞர்: ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய இளைஞரை கிராம மக்கள் மாட்டுவண்டியில் ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

News image
தேத்தாக்குடி கிராமத்தில் தங்கம் வென்ற இளைஞருக்கு வரவேற்பளித்து,மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்.
Updated On :27 ஜனவரி 2021, 2:07 pm

DIN

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய இளைஞரை கிராம மக்கள் மாட்டுவண்டியில் ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே  தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் விவசாயி. இவரது மகன் வசிஸ்ட் விக்னேஷ். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர், ஜன.18ஆம் தேதி நேபாளத்தில்  நடைபெற்ற 7வது இந்தோ- நேபால் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இவர் 2019-இல் நேபாளத்தில் நடைபெற்ற ஆறாவது இந்தோ நேபால் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதையடுத்து, விக்னேஷ் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். இந்த நிலையில்,நேபாளத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞரை பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து கிராமத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து அவரை மாட்டு வண்டியில் அழைத்து சென்று சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.