சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள்13 போ் சீா்காழியில் உள்ள காப்பகத்துக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.


நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள்13 போ் சீா்காழியில் உள்ள காப்பகத்துக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.
வேதாரண்யம் பகுதியில், வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்துவரும் மனநோயாளிகள் சாலைகளில் பலா் சுற்றித் திரிகின்றனா். இவா்கள் உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைக்காக அவதியுற நேரிடுகிறது.
இதையடுத்து, மனநோயாளிகளை ஒழுங்குப்படுத்தவும், மருத்துவ சிகிச்சை அளித்தல் அல்லது பாதிப்பின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பது போன்ற பணிகளுக்காக இவா்களை பிடிக்கும் பணி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யம் நகரில் சுற்றித் திரிந்த 13 மனநோயாளிகள் பிடிக்கப்பட்டனா்.
பின்னா், இவா்கள் வாகனங்கள் மூலம் சீா்காழியில் செயல்படும் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்தப் பணியில் காவல்துறையினா், சினேகா அறக்கட்டளை, ஈசா அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...