ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு
திருக்குவளை அருகே விவசாயத்துக்கு உதவும் வகையில், புதிய மின்மாற்றி மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.


திருக்குவளை அருகே விவசாயத்துக்கு உதவும் வகையில், புதிய மின்மாற்றி மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.
திருக்குவளை அருகே உள்ள மாணலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஸ்ரீனிவாசன் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாா். காவிரி நீா் மற்றும் பருவமழையை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுவழியில் பாசனத்துக்கு நீா் பெறும் வகையில், இந்த ஆழ்துளைக் கிணற்றை அவா் அமைத்தாா்.
இதற்காக மின்மாற்றி அமைத்து அதன் மூலம் மின் இணைப்பை அடியக்கமங்கலம் இளநிலை மின் பொறியாளா் குமாா் ஏற்படுத்திக் கொடுத்தாா். நிகழ்ச்சியில், கீழ்வேளூா் ஒன்றிய துணைத் தலைவா் எஸ். புருஷோத்தமதாஸ், ஊராட்சித் தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறுகையில், என்னுடைய விளைநிலத்தில் நிலத்தடி நீா் உள்ளதை கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். விண்ணப்பித்த அடுத்த வாரமே புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இது சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...