விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே மீனம்பநல்லூரில் அரிச்சந்திரா நதியின் தென்கரை ஆலமரத்தடி தெருவில் ஸ்ரீதேவி கருமாரியம்மன், ஸ்ரீகாத்தவராயன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகா் அருள்பாலிக்கும் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை அனுக்ஞை, விநாயகா் வழிபாட்டைத் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மகாபூா்ணாஹூதி நடைபெற்றன. பிறகு, பகல் 12.30 மணிக்கு கோயில் விமானக் கலசத்துக்கு யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.