விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆற்றங்கரையோர சாலையில் தடுப்புகள் அமைப்பு

திருக்குவளை அருகே தினமணி செய்தி எதிரொலியாக ஆற்றங்கரை சாலையில் மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:02 pm

DIN

திருக்குவளை அருகே தினமணி செய்தி எதிரொலியாக ஆற்றங்கரை சாலையில் மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில், அகரகொளப்பாடு பகுதியில் சாலையையொட்டி சந்திரா நதி ஓடுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீசிய நிவா் மற்றும் புரவி புயலின்போது பெய்த கனமழையால் இந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண் அரிப்பால் சாலையோரப் பகுதி சேதமடைந்தது. தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினரால் தற்காலிகமாக மண் மூட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த மண் மூட்டைகள் ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததால் தடுப்புகளின்றி ஆபத்தான நிலையில் சாலை காணப்பட்டது.

இதுகுறித்து, தினமணி நாளிதழில் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியான நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் வலுவிழந்து காணப்பட்ட ஆற்றின் கரையை பலப்படுத்தும் விதமாக மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்தனா். இதற்காக தினமணி நாளிதழ் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.