/

கீழ்வேளூா், திருக்குவளை அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கீழ்வேளூா், திருக்குவளை அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூா், திருக்குவளை அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயா்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கரோனா 3-ஆவது அலை வந்தால் தேவையான சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, கீழ்வேளூா் மற்றும் திருக்குவளையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், போதிய மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மகேந்திரன், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் ப.அருண்பதி, திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை அலுவலா் தி. தீபக்குமாா் , பொதுப்பணித் துறை பொறியாளா் ரஞ்சித், திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாா், ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கே. காா்த்திகேயன், ஒன்றியக் குழு உறுப்பினா் டி.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.