/

திருக்குவளையில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் மரியாதை

நாகை மாவட்டம் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினாா்.

திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு இல்லத்துக்கு வந்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், அங்குள்ள கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், அந்த மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலா் தி. தீபக்குமாரிடம் கேட்டறிந்தாா்.

அப்போது சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம், திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என்.கௌதமன், திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், ஒன்றியச் செயலாளா்கள் கீழையூா் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.