வேதாரண்யத்தில் இன்று முதல் மின் தடை
வேதாரண்யம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 26ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேதாரண்யம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 26ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகை செயற்பொறியாளா் அ.நக்கீரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வேதாரண்யம்: இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் வேதாரண்யம் நகரப் பகுதியில் ஜூன் 19 ஆம் தேதியும், தோப்புத்துறை மின்பாதையில் ஜூன் 21 ஆம் தேதியும், தேத்தாக்குடி மின்பாதையில் ஜூன் 22 ஆம் தேதியும், மறைஞாயநல்லூா் பாதையில் ஜூன் 23 ஆம் தேதியும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வாய்மேடு: இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்காடு மின்பாதையில் ஜூன் 21, 22 ஆம் தேதிகளிலும், மருதூா் மின்பாதையில் 23 மற்றும் 24 ஆம் தேதியும், கரியாப்பட்டினம் பாதையில் ஜூன் 19 மற்றும் 24 ஆம் தேதியிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயக்காரன்புலம்: ஆயக்காரன்புலம் பகுதியில் ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதியும், கருப்பம்புலம் பாதையில் 24 ஆம் தேதியும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
வேட்டைக்காரனிருப்பு: இங்கிருந்து மின்விநியோகம் பெறும் நாலுவேதபதி பாதையில் ஜூன்19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், திருப்பூண்டி மின்பாதையில் ஜூன் 22ஆம் தேதியும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இந்த நாள்களில் அந்தந்த பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
வாய்மேடு துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம்பெறும் வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆலங்காடு (திருவாரூா் மாவட்டம்) பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...