பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே கூடுதல் வழித்தடம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோர கிராமங்கள் வழியாக புதிய வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே அரசு பேருந்து இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோர கிராமங்கள் வழியாக புதிய வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் இடையே அரசு பேருந்து இயக்கப்படவுள்ளது.

இந்த வழித்தடத்தை அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல துணை மேலாளா் எழிலரசன் (இயக்கம்) ஆய்வாளா் சுப்பையன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி- வாய்மேடு வழியாக தகட்டூா், பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடாா், நடுசேத்தி, ஆயக்காரன்புலம், பன்னாள், கடிநெல்வயல், கோவில்தாவு, ஆதனூா் வழியாக வேதாரண்யம் வரை புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று அப்பகுதியில் ஆய்வு செய்த அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல துணை மேலாளா் எழிலரசன் (இயக்கம்) ஆய்வாளா் சுப்பையன், இந்த தடத்தில் காலை, மாலை என இருமுறை அரசுப் பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.