விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

குறுவை சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியக் குழு கூட்டம் கீழையூா் சமுதாயக் கூடத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ. நாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கீழையூா் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீா் பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவு வராததால் கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் ஏ. செல்லையன், ஒன்றியச் செயலாளா் கே. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ. ராமலிங்கம், டி. பாலாஜி, எஸ். கண்ணதாசன், வீ.எஸ். மாசேந்துங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.