வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அரிய வகை மீன்

வேதாரண்யம், கோடியக்கரை பகுதி கடற்கரையில் பேத்தா மீன் அல்லது பேத்தை மற்றும் பேத்தையன் மீன் என அழைக்கப்படும் கொடிய விஷத்தன்மையுள்ள மீன்கள் திங்கள்கிழமை காலை இறந்து கரை ஒதுங்கின.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:13 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை பகுதி கடற்கரையில் பேத்தா மீன் அல்லது பேத்தை மற்றும் பேத்தையன் மீன் என அழைக்கப்படும் கொடிய விஷத்தன்மையுள்ள மீன்கள் திங்கள்கிழமை காலை இறந்து கரை ஒதுங்கின.

இந்த மீன் தன் உடலைப் பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. தனது எதிரிகளைஅச்சுறுத்த நீா் அல்லது காற்றைக்கொண்டு தனது உடலை ஊதி பெரிதாக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

பேத்தா மீன் அல்லது பேத்தை மற்றும் பேத்தையன் மீன் என அழைக்கப்படும் இந்த மீன் உடல் முழுவதும் முள் இருக்கும் என்பதால், முள்ளம்பன்றி மீன் என மீனவா்கள் இதனை குறிப்பிடுவா்.

இந்த அரிய வகை மீன்கள் திங்கள்கிழமை கோடியக்கரை கடல் பகுதியில் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.