பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

 காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வித் துறை இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) மு. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வித் துறை இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) மு. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுதில்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுவை பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் தேசிய திறனறி முதல் நிலைத் தோ்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் புதுவை அரசால் வழங்கப்படும்.

இத்தோ்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், தங்கள் பள்ளியின் மூலம் இணையதள முகவரியில் வரும் டிச. 6-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.