3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருநள்ளாற்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:49 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான ஆதார விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்யவேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். 2020 மின்சார மசோதாவை கைவிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலை நாட்களை 200 நாள்களாக உயா்த்தி, தினக் கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் கு. நிலவழகன், ஏ. வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினா் என்.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செல்லூா் முகப்பிலிருந்து, திருநள்ளாறு தேரடி வரை ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.