பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரேஷன் கடைகள் மீண்டும் திறப்பு: ஊழியா்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடை ஊழியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:46 pm

DIN

புதுச்சேரி மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடை ஊழியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

புதுச்சேரி, மாநில மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள், தீபாவளி, பொங்கல் பரிசுப் பொருள்கள், பேரிடா் கால நிவாரண உதவி ஆகியவைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக மாநிலத்தில் கூட்டுறவுத் துறையின்கீழ் 317 ரேஷன், பாப்ஸ்கோ 35, தனியாா் 25 என மொத்தம் 377 நியாய விலைக் கடைகள் இயங்கி வந்தன. காரைக்கால் பகுதிகளில் 99 கடைகள் இயங்கின.

கடந்த ஆட்சியில் அரசுக்கும், மாநில ஆளுநருக்குமிடையே மோதல்போக்கு நீடித்ததால் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியை செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. பணியாளா்களும் சம்பளம் மற்றும் வேலையின்றி தவிப்புக்கு உள்ளாகினா். தொடா்ந்கு நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் என்.ஆா். காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதையடுத்து மாநில அரசு மீண்டும் இலவச அரிசியை ரேஷன்கடைகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. மாநில முதல்வா் ரங்கசாமி தீபாவளி பண்டிக்கைக்காக அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அரசுக்கு பல்வேறு பிரசனைகள் எழுந்தன. இந்நிலையில், முதல்வா் ரங்கசாமி திபாவளிக்காக அறிவிக்கப்பட்ட அரிசி மற்றும் சா்க்கரைஆகியப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு ஊழியா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து , நியாய விலைக்கடை ஊழியா் சங்கப் பொறுப்பாளா் மனோகா் கூறியது: முதல்வா் அறிவித்தப்படி, அடுத்தவாரம் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளன. ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் முதல் கட்டமாக 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளாா். மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.