எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கீழையூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்

கீழையூர் அருகே சிந்தாமணி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

News image
சாலையில் நாற்று நடும் கிராம மக்கள்.
Updated On :11 அக்டோபர் 2021, 6:56 am

DIN

கீழையூர் அருகே சிந்தாமணி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகை  ஊராட்சி சிந்தாமணி கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களுக்கு விவசாய பணி மேற்கொள்ள தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் சென்று வருகின்றனர்.

அதுதவிர இப்பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், இந்த சாலை வழியாகத்தான் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும், தற்பொழுதும் மழைக்காலம் என்பதால், சாலைகளில் தேங்கியிருக்கும் நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் நிலையில், சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஒன்றிணைந்து நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.