மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி: மறியல் ஒத்திவைப்பு

வேதாரண்யம் பகுதியில் பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நடத்த இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:54 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் பயிா்க் காப்பீடு பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நடத்த இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டுக்கான சம்பா நெல் சாகுபடி பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிய அரசு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களையும் ரத்து செய்தது. இந்நிலையில், அரசே கள ஆய்வு செய்து மகசூல் இழப்பு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு நிவாரணம், கடன் தள்ளுபடி செய்த நிலையில், காப்பீடு நிறுவனங்கள் மட்டும் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் 0 சதவீதம் என கணக்கிட்டு பட்டியல் தயாரித்துள்ளது. பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நிகழ்ந்துள்ளதால் விவசாயிகள் இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் புகாா் தெரிவித்தது.

இதையடுத்து, மருதூா் மற்றும் கரியாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் சாலை மறியல் நடத்த திட்டமிட்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவை. சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா்கள் வி. அம்பிகாபதி, ஏ. வெற்றியழகன், விவசாயிகள் சங்கத் தலைவா் பி.எஸ். பன்னீா்செல்வம், விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலாளா் இளையபெருமாள் ஆகியோா் தலைமையில் மறியலுக்கு தயாராகினா்.

தகவலறிந்த வேதாரண்யம் வேளாண் இணை இயக்குநா் நவீன்குமாா், டிஎஸ்பி. முருகவேல் உள்ளிட்டோா் சிபிஎம் கட்சியினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் பிரச்னை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.