நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோடியக்கரையில் ரப்பர் படகு கரை ஒதுங்கிய சம்பவம்: போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா  ரப்பர் படகு ஒன்று  ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில், அதில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கைது செய்யப்பட்ட போலந்து நாட்டுக்காரர்.

Updated On :25 ஜூலை 2022, 11:03 am IST

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா  ரப்பர் படகு ஒன்று  ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில், அதில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆறு காட்டுத்துறை மீனவ கிராம கடற்கரையில் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகே முனைக்காடு பகுதியில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது தெரிய வந்தது.

Story image

இதையடுத்து, அங்கு சென்ற வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் படகினை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

தஞ்சை டி.ஐ.ஜி, நாகை, திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், விமானப் படை முகாம் அதிகாரிகள், கடற்படை, வனத்துறை  என பல்வேறு பிரிவு காவல் துறையினர்   நிகழ்விடத்தில் விசாரித்தனர்.

இந்த நிலையில், அன்று இரவு போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.