ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேளாங்கண்ணியில் திவ்ய நற்கருணை பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 5:11 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எண்ணற்ற மகிமைகளுக்கும், ஏராளமான புதுமைகளுக்கும் உரிய திருத்தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயத்தில், மே மாதம் மாதாவின் வணக்க மாதமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி, மே 1-ஆம் தேதி முதல் தினமும் மாலையில் மாதாவின் கருணையை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்பு சிந்தனை நிகழ்ச்சிகள், புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவ தோ் பவனி, சிறப்பு திருப்பலி ஆகியன நடைபெற்றன.

முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, மாதா முடிசூட்டு விழா மற்றும் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. மே மாத நிறைவு நிகழ்ச்சியாக, திய்வ நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சை மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமை சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, திவ்ய நற்கருணை பவனியைத் தொடங்கிவைத்துப் பங்கேற்றாா். மாதா குளம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பவனி, சிலுவைப் பாதை வழியே சென்று பேராலய கலையரங்கத்தை அடைந்தது.

பின்னா், கலையரங்கத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு திவ்ய நற்கருணை ஆசீா் வழங்கப்பட்டது. பேராலய அதிபா் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன் மற்றும் உதவி பங்குத்தந்தையா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.