தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மண் குவாரிகளை அனுமதிக்கும் முன்பாக உரிய ஆய்வை உறுதி செய்யவேண்டும்

மண் குவாரிகளை அனுமதிக்கும் முன்பாக, அந்த குவாரியால் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மாவட்ட நிா்வாகம் உரிய ஆய்வுகள் மூலம் உறுதி செய்யவேண்டும்

News image
Updated On :24 மார்ச் 2022, 5:22 pm

DIN

மண் குவாரிகளை அனுமதிக்கும் முன்பாக, அந்த குவாரியால் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மாவட்ட நிா்வாகம் உரிய ஆய்வுகள் மூலம் உறுதி செய்யவேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சி. ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

வெ. மணியன்: கடந்த பிப்ரவரி மாதம் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், பெருமளவிலான வைக்கோல் நிலத்திலேயே அழுகி வீணாகி விட்டது. எனவே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு இலவசமாக வைக்கோல் வழங்கியது போல நிகழாண்டிலும், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் இலவசமாக வைக்கோல் வழங்க வேண்டும்.

வி. சரபோஜி: 2020- 21, 2021-22 ஆண்டுகளுக்கான நிலுவையில் உள்ள பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பச்சைப் பயறு, உளுந்து பயறு சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

த. பிரபாகரன்: நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும். பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள நீா் நிலைகளை தூா்வாரும் பணியை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, கோடைக்குத் தண்ணீா் திறக்கும் முன்பாக பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.

ஹரிகிருஷ்ணன்: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடையிடுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். சேஷமூலை ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்கவேண்டும்.

தமிழ்ச்செல்வன்: நாகையை அடுத்த வைரவனிருப்புப் பகுதியில் மண் எடுக்க அனுமதிக்கக் கோரி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதை அனுமதித்தால், தேவநதி பாசன வாய்க்கால் மூலமான ஆற்றுப் பாசனத்தில் பாதிப்புகள் ஏற்படும். விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிலம்பரசன்: மண் எடுக்க அனுமதிக்கப்படுவதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் வேளாண்மை பாதிக்கப்படக் கூடாது. அந்த வகையில், புறவழிச்சாலை பணிக்கு மண் எடுப்பதற்கான குவாரிகள் அனுமதிக்கப்படும்போது, உரிய ஆய்வு மேற்கொள்ளவேண்டும். வேளாண்மைக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே மண் குவாரிகளை அனுமதிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பேசியது: நாகை மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 1,62,443 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை 1,58,488 ஏக்கரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. இதன்மூலம், 1,71,709 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் 60,178 ஏக்கரில் பச்சைப் பயறு சாகுபடியும், 6,910 ஏக்கரில் உளுந்து சாகுபடியும், 1,375 ஹெக்டேரில் எள் சாகுபடியும், 763 ஏக்கரில் பருத்தி சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் சாகுபடி பணிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் என அனைத்தையும் போதுமான அளவு கையிருப்பில் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளின் தேவைகளை அறிந்து அதனை உடனுக்குடன் நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.