நாகை மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அல்லது இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள், இந்த முகாம்களில் பங்கேற்றுத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 2021-ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பாக 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...