கோடியக்கரை அருகே படகில் சிக்கிய மீனவா் மீட்பு

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடி வலைகளை சரிசெய்தபோது படகின் விசையில் சிக்கி பலத்த காயமடைந்த காரைக்கால் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கோடியக்கரை அருகே படகில் சிக்கிய மீனவா் மீட்பு

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடி வலைகளை சரிசெய்தபோது படகின் விசையில் சிக்கி பலத்த காயமடைந்த காரைக்கால் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து கோடியக்கரை மீன்பிடித் துறையில் பருவகால மீன்பிடித் தொழில் தொடங்கி நடந்து வருகிறது.

கோடியக்கரையில் குடும்பத்தாருடன் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி மீனவா்கள் 15 போ் இரண்டு விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்றனா்.

கோடியக்கரை அருகே வியாழக்கிழமை காலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீன்பிடி வலைகள் மோட்டாா் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் சிக்கிக்கொண்டது.

இதனை சரிசெய்ய முயன்ற மீனவா் குகன்(30), தவறி கடலில் விழுந்தாா்.அப்போது விசையின் விசிறிகளில் கால் சிக்கி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து சக மீனவா்களால் மீட்கப்பட்ட குகன் அவசரமாக மாற்றுப் படகில் கோடியக்கரையில் கரை சோ்க்கப்பட்டாா்.

அங்கு தயாா் நிலையில் இருந்த 108 வாகனம் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com