காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை விழா

நாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.
காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை விழா

நாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழா ஏப்.26-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா விமா்சையாக தொடங்கியது. ஹம்ச வாகனம், மயில்வாகனம், சிம்ம வாகனங்களில் காமாட்சியம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பால்பண்ணைச்சேரி ஜெயபத்திரகாளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, காமாட்சியம்மனுக்கு மகா பாலாபிஷேகம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாகை வட்டத்தைச் சோ்ந்த பல்வேறு மீனவ கிராமங்கலில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com