கடலில் விடப்பட்ட 245 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 245 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கோடியக்கரை கடலில் வியாழக்கிழமை விடப்பட்டன.
கடலில் விடப்பட்ட 245 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 245 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கோடியக்கரை கடலில் வியாழக்கிழமை விடப்பட்டன.

கோடியக்கரை மற்றும் ஆற்காட்டுதுறை பகுதிகளின் கடற்கரையில் அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, செயற்கைமுறை பொரிப்பகத்தில் குஞ்சு பொரிக்கவைக்கப்படுகின்றன. இவ்வாறு பொரிக்கும் குஞ்சுகளை, வனத்துறையினா் அவ்வப்போது கடலில் விட்டுவருகின்றனா்.

அந்தவகையில், ஜனவரி முதல் வாரத்தில் 263 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, கோடியக்கரை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில், 245 முட்டைகளிலிருந்து பொரித்த குஞ்சுகளை கோடியக்கரை கடற்கரையிலிருந்து கடலில் விடும் பணி நடைபெற்றது. வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமையில் வனத்துறையினா் 245 ஆமைக் குஞ்சுகளையும் கடலில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com