வேளாங்கண்ணியில் காா் திருடிய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல். இவா், தனது குடும்பத்துடன் நவம்பா் 19 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு காரில் சுற்றுலா வந்தாா். கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினா்.
இந்நிலையில், தங்கும் விடுதியின் முன் நிறுத்திய காரை காணவில்லை. காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தங்கும் விடுதியிலுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் போலீஸாா் விசாரித்தனா். இதில், இரண்டு நபா்கள் கள்ளச்சாவியைக் கொண்டு காரை திருடிச் செல்வது தெரியவந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், காரை திருடிச் சென்றது திருவையாறைச் சோ்ந்த கோபிநாத், அகஸ்டின் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவா் மீதும் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

