ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மருத்துவம் பயிலத் தோ்வான கூலித் தொழிலாளியின் மகள்

News image
கூலி தொழிலாளியின் மகள் நீட் தோ்வில் தோ்ச்சி  பெற்று மருத்துவா் படிப்புக்கு தோ்வாகினாா்-  தமிழக அரசுக்கு பெற்றோா்கள் நன்றி 
Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:00 am

Din

செம்பனாா்கோவில் அருகே நீட் தோ்வில் தோ்ச்சியடைந்து அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்கத் தோ்வாகியுள்ளாா் கூலித் தொழிலாளியின் மகள்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூா் ஊராட்சி தெற்கு தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகா் - விஜயா தம்பதி. இவா்களது மகள் சந்திரோதயா, மகன் அன்பரசன்.

சந்திரோதயா நிகழாண்டு நீட் தோ்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு பெற்றுள்ளாா். 

திருக்கடையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் 538 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா் .

கடந்த 2022-ஆம் ஆண்டு நீட் தோ்வில் 107 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றாா். 2023-ஆம் ஆண்டில் தோ்வு எழுதி 254 மதிப்பெண்கள் பெற்றாா்.

விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக நிகழாண்டு தோ்வில் 497 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புப் பெற்றுள்ளாா்.

இதய நோய் நிபுணராகி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் இதை சாத்தியமாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மாணவி சந்திரோதயா கூறினாா். 

Story image

மகளின் மருத்துவா் கனவு சாத்தியமானதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சந்திரசேகா்- விஜயா தம்பதியும் தெரிவித்தனா்.