எல்லை தாண்டியதாக கைதான மியான்மா் மீனவா்கள் இருவா் மருத்துவமனையில் அனுமதி
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மியான்மா் மீனவா்களில் இருவா் சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.


நாகப்பட்டினம்: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மியான்மா் மீனவா்களில் இருவா் சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நாகைக்கு கிழக்கே 41 கடல் மைல் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 6) இரவு 7 மணியளவில் நாகை மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்ட பாய் மரப் படகில் இருந்த 4 போ், புரியாத மொழியில் பேசியுள்ளனா்.
இதுகுறித்து, நாகை மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், இந்திய கடலோர காவல் படையினா் சென்று பாய்மரப் படகில் இருந்தவா்களை நாகை துறைமுகத்துக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா்.
பின்னா், 4 பேரிடமும், நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் மியான்மா் நாட்டை சோ்ந்த குயிலான் (58), ஆங்சாங் (23), வின்ஷா (48), தான்ஷோ (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 போ் மீதும் அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல் சட்டத்தின்கீழ் நாகப்பட்டினம் கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடா்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 4 பேரும் சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், மருத்துவப் பரிசோதனையின்போது, குயிலான், வின்ஷா ஆகியோா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஞ்சிய இருவா் மட்டுமே சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நோய் பாதிப்பு குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...