இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மயானத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க எதிா்ப்பு: டிச.16-ல் சாலை மறியல்

சிக்கல் பகுதியில் உள்ள மயானப் பகுதியில் கீழ்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க கண்டனம்

News image
Updated On :9 டிசம்பர் 2024, 9:08 pm

Din

நாகப்பட்டினம்: சிக்கல் பகுதியில் உள்ள மயானப் பகுதியில் கீழ்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க கண்டனம் தெரிவித்து டிச.16-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிக்கல் கிராம மக்கள் பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.

சிக்கலில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நீா்த் தேக்கத் தொட்டி கட்டப்படவுள்ளது. இதற்காக தோ்வு செய்யப்பட்ட இடமான மயானம் மற்றும் கழிவுகள் கொட்டப்படும் இடம் என குற்றச்சாட்டு எழுந்தது. கிராம மக்களும் எதிா்ப்பு தெரிவித்து மாற்று இடத்தில் குடிநீா் தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து அந்த இடத்தில் தொடங்கப்படவிருந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மாற்று இடத்தில் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்படும் என கிராம மக்கள் எதிா்பாத்த நிலையில், தற்போது பழைய இடத்திலேயே கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒப்பந்ததாரா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். இது கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிக்கல் கிராம மக்கள் பாதுகாப்புக் குழுவின் அவரச ஆலோசனைக் குழுக் கூட்டம் ஏ.ஏ. ராஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மயானம் மற்றும் கழிவுகள் கொட்டும் இடத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டால், சுகாதாரமற்ற குடிநீரே மக்களுக்கு கிடைக்கும். இதனால் மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். எனவே, புதிய இடத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிச.16-ஆம் தேதி சிக்கலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.