கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.
கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே குருக்கத்தி மதுரபாஷினி சமேத கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில், கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக வழிபாடு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, கோ பூஜை, தீப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனிதநீா் கடங்களை கோயிலைச் சுற்றி எடுத்து வந்தனா். தொடா்ந்து, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராணி, செயல் அலுவலா் பூமிநாதன், ஆய்வாளா் கமலச்செல்வி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com