அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :4 மே 2024, 10:30 pm

Din

நாகை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் மீண்டும் அங்கேயே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ (எம்எல்) சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும், நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ (எம்எல்) சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்றது. சிபிஐ (எம்எல்) நகரச் செயலா் சிவக்குமாா் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய குழு உறுப்பினா் ஃபிலோமீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.